Saturday 27 July 2013

தலைமை ஆசிரியர் பணி நியமனம்: ஆதிதிராவிடர் துறை 15 நாளில் முடிவு.



             தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ள பள்ளிகளில்தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து
வருகிறது. பணி நியமனம், 15 நாளில் நிறைவு பெறும்.தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 75 ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 32,708 மாணவர்; 29,618 மாணவியர் என மொத்தம், 62,326 பேர் படித்து வருகின்றனர்.இதில், 26 மேல்நிலைப் பள்ளிகளில், ஓராண்டாக, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பிரச்னை குறித்து, "தினமலர்"நாளிதழில், கடந்த, 21ம் தேதி செய்தி வெளியானது.இதைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள, பள்ளிகளில் விரைவில் தலைமை ஆசிரியர்களை நியமிக்க, ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "காலியாக உள்ள பணியிடம் குறித்தும், ஆசிரியர்களின் பணி மூப்பு குறித்தும், தகவல் பெற்றுள்ளோம். அடுத்த மாத துவக்கத்தில், அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள் பணியாற்றுவர்" என்றார்.

No comments:

Post a Comment