Tuesday 30 July 2013

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?


               பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு
உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித்துறை, பணி நீக்கம் செய்தது. மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும், சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால், அனைவரையும் உடனடியாக, பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டது.

                           இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை" என, தெரிவித்தன.

No comments:

Post a Comment