Tuesday 30 July 2013

பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி., தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை


                        "பள்ளி பாடப்புத்தக அட்டையில் இருந்து கூட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படலாம்; எனவே, புத்தகங்களை, ஒரு வரி விடாமல், முழுமையாக படிக்க வேண்டும்" என, டி..டி., தேர்வு எழுதுவோருக்கு,
பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர். தமிழ் பாடம் குறித்து, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங்" பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன்: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோர், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள, பள்ளி பாடப்புத்தகங்களை, முழுமையாக படித்தாலே, எளிதில் வெற்றி பெறலாம்தமிழ் பாடத்தை பொறுத்தவரை, புத்தக அட்டையில் இருந்து கூட, கேள்விகள் கேட்கப்படலாம். அனைத்து புத்தகங்களையும், ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது, கேள்விக்கு உடனே பதிலளிக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து, பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
                                 சமூகத்தில் நடக்கும் செய்திகள், பெரும்பாலும் கேள்விகளாக அமையும். சமூக நிகழ்வுகளையும், அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், சாதாரண கேள்விகளும், குழப்பும் வகையில் கேட்கப்படும். அந்நேரத்தில், யோசித்து நிதானமாக பதிலளிக்க வேண்டும்நம்மை ஏமாற்றும் வகையில், கேட்கப்படும் கேள்விகளுக்கு உஷாராக பதிலளிக்க வேண்டும். தமிழை பகுத்து படிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் பயிற்சி மையநிர்வாக இயக்குனர் வெங்கடாசலம்: அடிப்படை கணிதம், சூத்திரங்களை முழுமையாக படிப்பதோடு, பயிற்சி செய்து பார்க்க வேண்டும்

                       மனப்பாடம் செய்து படிப்பதை விட்டு விட்டு, புரிந்து படிக்க கற்று கொள்ள வேண்டும். தேர்வுக்கு படித்தால் மட்டும் போதாது, படித்ததை தேர்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்று கொள்ள வேண்டும்போட்டி தேர்வு, நம் அறிவுக்கு நடத்தப்படும் தேர்வு அல்ல; நம் அறியாமையை சோதிக்க நடக்கும் தேர்வு. தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம். ஆங்கில பாடம் குறித்த எளிய, டிப்ஸ்களை,வழங்கும், பயிற்சி மைய நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி: குழப்பமான மொழியான ஆங்கிலத்தை, அவசியம் கற்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது இல்லை.

No comments:

Post a Comment