Monday 29 July 2013

வேலை உருவாக்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு.



          பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கு திட்டத்தின் கீழ், 35 சதவீத அரசு மானியத்துடன் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் நிதி வழங்கப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொழில்
முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.மாவட்ட ஆட்சியர் ராஜேஸ் வெளியிட்ட அறிக்கை: "பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக, 35 சதவீத அரசு மானியத்துடன் நிதி உதவி வழங்கப்படுகிறது.எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், 25 லட்சம் ரூபாய் வரையிலான தொழில் திட்டங்களுக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம். இத்திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்படவுள்ளது. உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க, 25 லட்ச ரூபாய் வரையிலும், சேவை சார்ந்த தொழில் துவங்க, 10 லட்ச ரூபாய் வரையிலான திட்டங்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது.பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில், 25 சதவீத மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு, 15 சதவீத மானியமும் வழங்கப்படும்.சிறப்பு பிரிவினரான இதர பிற்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஊரக பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில், 35 சதவீத மானியமும், நகர் பகுதியில் தொடங்கப்படும் தொழில்களுக்கு, 25 சதவீத மானியமும் வழங்கப்படும்.18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.சேவை சார்ந்த தொழில் திட்டங்கள் 5 லட்ச ரூபாய்க்கு கூடுதலாகவும், உற்பத்தி சார்ந்த தொழில் திட்டங்கள் 10 லட்ச ரூபாயுக்கு கூடுதலாக இருக்கும் பட்சத்தில் பயனாளி குறைந்த பட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவின் மூலமாக தகுதியுள்ளபயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது விண்ணப்பம் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.கடந்த, 25ம் தேதி கலெக்டர் தலைமையில் நடந்த நேர்முக தேர்வில்,92 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வங்கிகளுக்கு பரிந்து செய்யப்பட்டுள்ளது. எனவே, புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment