Monday 29 July 2013

பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்: சி.இ.ஓ.,க்கள் கலக்கம்

               "சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், பொது தேர்வில் தரம், தேர்ச்சி விகிதம் பாதித்த அரசு பள்ளிகள் குறித்து விவாதிக்கும் போது, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவு பிறக்கப்படும்
என்பதால் சி...,க்கள் கலக்கத்தில் உள்ளனர். 2013-14ம் கல்வி ஆண்டு அரசு பொது தேர்வுகளில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த, ஆலோசனை கூட்டம், சென்னையில், ஆக.,1, 2ம் தேதிகளில் நடை பெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட சி..., கூடுதல் சி...,க்கள், டி...,க்கள் பங்கேற்கின்றனர்.

         கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில், கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர்கள் இதில் பேசுகின்றனர். கூட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுதேர்வில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் குறித்து விவாதப்படுகிறது. பள்ளியின் தரம், அனைவருக்கும் கல்வி திட்ட கட்டுமான பணிகளால் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா, இல்லையா போன்றவை குறித்தும், சி...,க்களிடம் கருத்துக் கேட்டு, கல்வித்துறை செயலர் ஆலோசனை வழங்க உள்ளார். தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட சி...,க் களிடம், சரியான விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "பள்ளியின் தரம், வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து, சி...,க்களிடம் விபரம் கேட்கப்படும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சி...,க்களுக்கு, கிடுக்கிப்பிடி உத்தரவுகளை போடலாம்" என்றார்
.

No comments:

Post a Comment