Friday 30 August 2013

89 அரசாணைகளில் உள்ள அநீதி களைய வேண்டும் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை


             அண்மையில் வெளியிடப்பட்ட 89 அரசாணைகள் மூலம் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தமிழக முதல்வர் தலையிட்டு களைய வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.அரசு ஊழியர் சங்கத்தின்
புதுக் கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் கி.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலர் ..கண்ணன் சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமிபொருளாளர் எம்.ஜோஷி உள்ளிட்டோர் பேசினர்.தமிழக அரசு தற்போது வெளி யிட்டுள்ள 89 அரசாணைகளால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட் டுள்ளதாக ஆட்சியாளர்களோநிதித் துறை செயலரோ வழக்கமாக அறி விப்பது போன்ற எந்தவித அறிவிப் பையும் வெளியிடவில்லை. இதன் பின் னணியில் அரசாணைகளால் பலன் பெறுவோர்,பாதிக்கப்படுவோர் குறித்து கூர்ந்தாய்வு செய்யப்பட்டதில்சுமார் 35 ஆயிரத்து 725 ஊழியர்கள் மாதம்தோறும் ஏறத்தாழ ரூ. 1 கோடியே 22 லட்சத்தை மட்டுமே கூடுதலாகப் பெறுவர்.

                        அதே நேரத்தில் சுமார் 13 ஆயிரத்து 237 ஊழியர்கள் சுமார் 4 கோடியே 45 லட்சத்தை குறை வாகப் பெறுவர். மொத்தத்தில் இந்த 89 அரசாணைகளால் அரசின் மாதாந்திர ஊதியச் செலவில் ரூ. 3.23 கோடி குறைகிறது. இது ஊதியத்தில் மட்டும் தெரியவந்துள்ள கணக்கு. இத்துடன்80 சதவிகித அகவிலைப்படியையும் இதரப்படிகளையும் சேர்த்தால் அரசுக்கு மாதம்தோறும் ரூ. 6 கோடி நிதி மீதமாகிறது. இந்த குளறுபடி களுடன் கூடிய அரசாணைகள் மூலம் அரசு ஊழியர்களுக்கு அநீதி இழைக் கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டி யுள்ளது. எனவே குறைதீர்க்கும் குழுவின் அறிக்கையை முழுமையாக வெளி யிட்டு ஊழியர் சங்க நிர்வாகிகளை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment