Friday 23 August 2013

SCERT சார்பில் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடக்கம்


                மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில்
பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும்.
மேலும், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற வைக்கும் வகையிலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இப்பயிற்சி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஒவ்வொரு பாடங்களிலும் தலா இரண்டு நாள்கள் ஆக.26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-11ம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ம் தேதி ஆங்கில பாடத்திலும், சுப்பையாநாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணிதம் பாடத்திலும் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. அதையடுத்து, கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மற்ற பாடங்கள் குறிப்பிட்ட நாள்களில் அளிக்கப்பட இருக்கிறது. இதில், கண்டிப்பாக அனைத்து பாடங்களின் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

                              இந்த முகாமிற்கு கருத்தாளர்களாக ஒவ்வொரு பாடத்திற்கும் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர், அனுபவம் பெற்ற மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் உள்ளிட்டோர் கருத்தாளர்களாக இருந்து பயிற்சி அளிப்பார்கள் என பாலையம்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் முதல்வர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment