Saturday 21 September 2013

ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்



              சென்னைஉயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரைபதிவு மூப்பு அடிப்படையில்பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு,நிருபர்களிடம்
கூறியதாவது: முந்தைய தி.மு..ஆட்சியில்பதிவு மூப்பு அடிப்படையில்ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். 2010,ஆக., 23ம் தேதிக்கு முன்பட்டதாரி ஆசிரியர் பணிக்காகசான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டது. இதில்தகுதி வாய்ந்த, 70 பேர் விடுபட்டுவிட்டனர். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை காரணம் காட்டி, '70 பேருக்கும் பணி வழங்க முடியாதுஎனதமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பாகசென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில்ஜூலை, 9ம் தேதி தீர்ப்பு வந்தது. டி..டி.,தேர்வு முறைமேற்கண்ட தேதிக்கு முன்சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்களுக்கு பொருந்தாது எனவும்அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும்உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைகாலம் தாழ்த்தாமல் அமல்படுத்ததமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.

No comments:

Post a Comment